அரியலூர் மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்ற தடுப்பு விழிப்புணர்வு

அரியலூர் மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-04-11 07:04 GMT

அரியலூர் மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்ற தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம், சிலால் மற்றும் தேவாமங்கலம் கிராமங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஞா.செங்குட்டுவன் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் க.சிவநேசன் ஆகியோர் கலந்துகொண்டு இணையக் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், இணையக் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு செய்தனர்.

இதில் சுமார் 250 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News