முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் கொள்ளை

நேற்று இரவு மர்ம நபர்கள் முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வீட்டில் இருந்த 10சவரன்நகை, 65ஆயிரம்பணம் கொள்ளை

Update: 2021-08-08 12:33 GMT

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை 65 ஆயிரம் பணம் திருடு


அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரத்தின் தம்பி முத்துசேர்வாமடம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளிதாசன். இவர் சம்போடை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் இவரது வீட்டில் இருந்த 10 சவரன் நகை, 65 ஆயிரம் பணம் கொள்ளை அடித்துள்ளனர்.

ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாசன். இவர் ஜெயங்கொண்டம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரத்தின் தம்பி. முத்துசேர்வார் மடம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். நேற்று இரவு நேற்று இரவு ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வீட்டில் மின்சாரம் இல்லாததால் விட்டின் முகப்பு பகுதியில் உள்ள வராண்டாவில், காளிதாஸ் மற்றும் அவரது மகள்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் பின் பக்க கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காளிதாசன் அதிகாலை எழுந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை 65 ஆயிரம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின்பேரில், மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது, மேலும் மூன்று வீடுகளில் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (ஆசாரி) மற்றும் கணேசமூர்த்தி , ஜோதி ஆகியேரின் வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. இதில் தியாகராஜன் என்பவரது வீட்டில் சில வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.

அரியலூரில் இருந்து மோப்ப நாய் டிக்ஸி மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு வீடுகளில் கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபர்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News