ஜெயங்கொண்டத்தில் கொரோனா கவச உடையுடன் வந்து பெண் ஒருவர் வாக்களித்தார்

நகர்ப்புற தேர்தலில் கொரோனா கவச உடையுடன் பெண் ஒருவர் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2022-02-19 14:24 GMT

கொரோனா பாதுகாப்பு உடையுடன் வந்து ஜனநாயக கடமையாற்றிய பெண் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 வார்டுகளுக்கு, 38 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து காலை 7 மணி முதல் மதியம் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் ஆகியோருக்கு மட்டும் 5 மணியிலிருந்து 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு மையத்திற்கு ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் முழு கவச உடை அணிந்து கொண்டு வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது தனது வார்டுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தேர்தல் அலுவலரிடம் அடையாள அட்டையை காண்பித்து அவர் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

மேலும் வாக்களித்த அந்தப் பெண்மணிக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், அவர் பரிசோதனைக்கு முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மாவட்டத்திலேயே கவச உடையுடன் வந்து வாக்களித்தது இந்த பெண்மணி ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News