ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இதுவரை 6481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;
19ம் தேதி நிலவரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 8 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 22 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 4 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 14 பேரும் சேர்த்து 48 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1025 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2535நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1564 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1357 நபர்களும் சேர்த்து 6481 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.