ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 18 பேருக்கு கொரோனா
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் இன்று ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 7நபர்கள், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 4நபர்கள், தா.பளூர் ஒன்றியத்தில் 7நபர்கள், சேர்த்து 18 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 1071 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2700 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1692 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1537 நபர்களும் சேர்த்து 7000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.