அழகாபுரம் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்

அழகாபுரம் கிராமத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-17 08:05 GMT

அழகாபுரம் கிராமத்தில் கிராமத்தின் வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டி , கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தில், வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் அழகாபுரம் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை செயலாளர் வீராசாமி தலைமையில் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு மணிவேல் ஆகியோர் கண்டன  உரை நிகழ்த்தினர். இதில் குழந்தைகள் புதைக்கும் மயான ஆக்கிரமிப்பை அகற்றிடவும், அனைத்து தரப்பினருக்கும் 100 நாள் வேலை வழங்கிடவும், கூட்டுறவு வங்கியில் தலித் மக்களுக்கும் கடன் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  கிராம பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News