மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம்..

Justice For Srimathi in Tamil-மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி கேட்டு ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-07-19 07:44 GMT

Justice For Srimathi in Tamil

Justice For Srimathi in Tamil-கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று துண்டு பிரசுரம் வழங்கி உள்ளிருப்பு போராட்டம் செய்ய முயற்சித்தனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களை தடுத்ததால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

அப்போது அனுமதி இன்றி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது மற்றும் போராட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்குவது குற்றமாகும். ஸ்ரீமதியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே இவ்வகையான போராட்டங்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள். எனவே போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்குள் அனைவரும் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியதையடுத்து மாணவர்கள் போராட்ட முயற்சி கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தொடர்ந்து மாணவ மாணவியர்களை கல்லூரி வளாகத்திற்கு முன்பாக வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைகதிரவன் பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறி போராட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News