தங்கை கண் முன்னே கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு
உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவி, தங்கையின் கண் முன்னே நீரில் மூழ்கி உயிரிழப்பு.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இளையோர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் கோயமுத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கோவில் திருவிழாவை முன்னிட்டு தனது கல்லூரி தோழியுடன் சொந்த ஊருக்கு ஸ்வேதா வந்துள்ளார்.
இந்நிலையில் குளிப்பதற்காக ஸ்வேதா அவரது தங்கை மற்றும் கல்லூரி தோழி உள்ளிட்டோர் உடையார்பாளையம் பெரிய ஏரிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது தங்கை மற்றும் தோழி கண் முன்னே ஸ்வேதா ஏரி நீரில் மூழ்கியுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் காவல்துறை உதவியுடன் ஸ்வேதாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர் ஸ்வேதா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.