ஆண்டிமடம் மகளிர் கல்லூரியில் 75வது சுதந்திரதின மரக்கன்று நடும்விழா

வரதராஜன்பேட்டை மதர் ஞானம்மா மகளிர் கல்லூரியில், 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது.;

Update: 2021-09-25 05:30 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் வரதராஜன்பேட்டை மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட விழாவும், 75வது சுதந்திர தின விழாவும் நடைபெற்றது. விழாவில் ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், வரதராஜன்பேட்டை கிராம அலுவலர் சுப்பையா கலந்து கொண்டார்கள்.

பேரணியை கல்லூரி செயலர் ஜோசப் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மேரி அவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கங்கள் பற்றியும் அமைப்பு பற்றியும் விளக்கினார். மாணவிகளும் பேராசிரியர்களும் 75 மரக்கன்றுகளை நட்டனர்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர் சுகந்தி ஓனோரின் மார்சலின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அனைத்து மரக்கன்றுகளும், தொன் போஸ்கோ நிறுவனத்தில் இயங்கிவரும், செம்மண் மக்கள் இயக்கம் மற்றும் பசுமை மன்றம் சார்பில் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற இயற்கையை காப்போம் என்ற கருத்தரங்கில் செம்மண் மக்கள் இயக்க பொறுப்பாளர் அந்தோணிசாமி, பசுமை மன்ற பொறுப்பாளர் ஜோசப் அருள்ராஜ், உதவித் தலைமையாசிரியர் பங்கிராஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மேரி, உதவி திட்ட அலுவலர் ஆஞ்சலாமேரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News