அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரயலூர் மாவட்ம் சாத்தம்பாடி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-11-14 08:19 GMT

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சாத்தாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனின் இல்லத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விக்கிரமங்கலம் காவல்துறையின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் கலந்துகொண்டு பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். மேலும் குழந்தைகள் கடத்தலை எவ்வாறு தடுப்பது, குழந்தை தொழிலாளர் முறையை எவ்வாறு ஒழிப்பது, பாலியல் வன்கொடுமையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News