ஜெயங்கொண்டம் அருகே யோகா பவுண்டேசன் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Update: 2022-05-10 14:46 GMT

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் 8 வயதுக்கு மேற்பட்ட 330 மாணவர்கள் மூன்று மாத பவுண்டேஷன் யோகா கோர்ஸ் பயிற்சி எடுத்திருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பரப்ரஹ்மம் இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்பிரிச்சுவல் - யோகா எஜுகேஷன் சார்பில் சான்றிதழ்களை மேனேஜிங் டைரக்டர் உஷா முத்துக்குமரன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.யோகா பயிற்றுனர்கள் துணை பேராசிரியை குமாரி, அமுதி,சந்திரமவுலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வா் தனலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். செவிலியா் கல்லூரி முதல்வா் சுருதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News