ஜெயங்கொண்டத்தில் தொழிலாளர் தினம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச கிளையில், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர்கள் க.தர்மதுரை (தெற்கு), ரெங்க.முருகன் (வடக்கு), ஜெயங்கொண்டம் நகர செயலாளரும்,நகர்மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி, தொ.மு.ச நிர்வாகிகள் தலைவர் கொளஞ்சி, செயலாளர் சேகர், பொருளாளர் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.