மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 22 இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது 4 இடங்களில் மட்டுமே மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. இது அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்தபடி தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், செந்துறை, திருமானூர் ஒன்றியங்களில் உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீர்வள துறை அதிகாரிகள் உடனடியாக இடங்களை ஆய்வு செய்து மணல் அள்ள இடம் தேர்வு செய்து மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி பூங்காவில் இருந்து கோஷம் எழுப்பியவாறு ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
தமிழக அரசு உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரியை உடனடியாக தமிழகத்தில் திறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒன்று திரட்டி நீர்வளத்துறை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தெரிவித்தார்.