அரியலூர் மாவட்டத்தில் விதிகளை மீறிய வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-10-05 05:26 GMT

ஜெயங்கொண்டம் அருகே  தேர்தல் நடத்தை விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள சுவவெராட்டிகள்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பதாம் தேதிகளில்  நடைபெற உள்ளது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வினோத் கண்ணன், ராஜாராம் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் சின்னங்களை விளம்பரம் செய்து, பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வட்டார தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயராஜ் உடனடியாக சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

மேலும் இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்பேரில் நாயகனைப்பிரியால் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News