அணைக்கரை பாலத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை
Anaikarai Bridge-1லட்சம் கணஅடிக்கு மேல் நீர்செல்வதால் அணைக்கரை பாலத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;
அணைக்கரை பாலம்.
Anaikarai Bridge-அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வினாடிக்கு 98918 கன அடி தண்ணீர் கடலுக்கு திறக்கப்படுகிறது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை கொள்ளிடம் கீழணை வந்த நிலையில் தற்போது நீர் 1 லட்சத்து 1385 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் கிளை பாசன வாய்க்கால்கள் மற்றும் வீராணம் ஏரிக்கு வடவார் தலைப்பு வாய்க்கால் மூலமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரியலூர் மாவட்டம் வடவார் கொள்ளிடக்கறையில் 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர் செல்வதால் பாலத்தின் நிலையை கருதி தற்காலிகமாக வடவார் பாலத்தில் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு செய்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2