மதகு உடைப்பை சரிசெய்யகோரி விவசாயிகள் கண்ணில் கருப்புதுணி கட்டிஆர்ப்பாட்டம்

400 ஏக்கர் சாகுபடி, 3 மதகுகளும் உடைந்து கிடக்கும் நிலையில் தண்ணீர் தேக்கி வைக்க வழிஇன்றி வாய்க்கால் வழியாக வீணாகி வருகிறது

Update: 2021-08-23 09:37 GMT

பாசன மதகு உடைப்பை சரிசெய்ய கோரி விவசாயிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் பொன்னாற்று பாசன வாய்க்கால் மூலம், ரெட்டைபள்ளம் ஏரி வழியாக 3 மதகுகள் அமைத்து சுமார் 400 ஏக்கர் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 3 மதகுகளும் உடைந்து கிடக்கும் நிலையில் தண்ணீர் தேக்கி வைக்க வழி இன்றி வாய்க்கால் வழியாக வீணாகி வருகிறது. இது குறித்து, மாவட்டம் கலெக்டர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வரை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் தற்போது சம்பா சாகுபடிக்கு தயாராகும் நிலையில், தொடர்ந்து தண்ணீர் தேக்க வழி இன்றி வெளியேறுவதால் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் உள்ள விவசாய நிலங்களை கண்களால் காண முடியவில்லை என கூறி விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags:    

Similar News