அரியலூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தாக்கப்பட்டதற்கும், கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.;
அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையில் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கு வங்கத்தில் பாஜகவினர் தாக்கப்பட்டதற்கும், கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மம்தா தலைமையில் மேற்கு வங்கத்தில் பதவி ஏற்க இருக்கும் அரசை கண்டித்தும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறையில் அண்ணாசிலை முன்பு மாவட்ட செயலாளர். அருண்பிரசாத். தலைமையிலும் செந்துறை தெற்க்கு ஒன்றிய தலைவர் பூ. இங்கோவன். வடக்கு ஒன்றிய தலைவர் இரவி. புயல் செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய பொதுசெயலாளர்கள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும். மகளிரணி நிர்வாகிகளும் கலந்துகொண்டு மம்தா தலைமையில் மேற்கு வங்கத்தில் பதவி ஏற்க இருக்கும் அரசை கண்டித்தும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டண ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்சி யில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.