நீலகிரி எம்பி ஆ.ராசா மீது ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பாஜக புகார்

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் புகார்

Update: 2022-09-16 11:57 GMT

 ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையில், நகர தலைவர் ராமர் உள்ளிட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

அரியலூர் - இந்துக்களை இழிவாக பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் புகார் மனு அளித்தார்.

உண்மையில் ஆண்மகனாக இருந்தால், துணிவிருந்தால் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும். அதையும்  நாங்கள் பார்க்கிறோம் என பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் செய்தியாளிடம் தெரிவித்தார்.

இந்துக்களை இழிவாக பேசியும், கொச்சைப்படுத்தியும், மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாஜக சார்பில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் தலைமையில், நகர தலைவர் ராமர் உள்ளிட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,திமுக துணை பொது செயலாளர் ஆ. ராசா தொடர்ந்து இந்துக்களையும் இந்து சமுதாயத்தையும் இழிவு படுத்தியும், கொச்சைப்படுத்தியும் பேசி வருகிறார்.சமீப காலமாக திமுகவில் கட்சியில் இருந்து அவர் ஓரம் கட்டுப்பட்டு உள்ளார். தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இது போன்ற கருத்துக்களையும் பேசி வருவது கண்டனத்துக்குரியது.

தார்மீக அடிப்படையில் தன்னுடைய பதவியை தானாகவே விலகி கொள்ள வேண்டும். அல்லது திமுக தலைவர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு சென்று வருகிறார். அவரும் ஒரு இந்து தான். இதுபோன்று இவர் பேசுவது கண்டனத்திற்குரியது.உண்மையில் ஆண் மகனாக இருந்தால், துணிவிருந்தால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து காட்டட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பாஜக அரியலூர் மாவட்டத் தலைவர் ஐயப்பன் கூறினார்.

Tags:    

Similar News