அரியலூர் மாவட்டத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அரியலூர் மாவட்ட கல்வி நிலையங்களில் காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்

Update: 2022-08-14 13:46 GMT

அரியலூர் மாவட்ட பள்ளிகளில் போலீசார் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுபடி 50க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் காவல்துறை அதிகாரிகள் போதைப் பொருட்கள் எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காமராஜ் தலைமையில் விளாங்குடி அரசு பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


அரியலூர் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் தலைமையில் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதே போல் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் தலைமையில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும்,  மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன்  தலைமையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்(DCRB) தலைமையில் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலு் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மற்ற கல்வி நிலையங்களில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News