அரியலூரில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகித்து விழிப்புணர்வு
அரியலூர் நகரபகுதியில் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் துண்டு பிரசுரங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவுபடி, அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகர பகுதியில் நகரின் முக்கிய சந்திப்புகளில் இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்து, அரியலூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணிய மூர்த்தி மற்றும் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷகிரா பானு தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.