அரியலூர்- சுரங்கம் விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

சுரங்கம் விஸ்தரிப்பு தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பொதுமக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார்.;

Update: 2021-09-14 11:46 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையில்  சுரங்கம் விஸ்தரிப்பு தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.


அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மணகெதி மற்றும் தத்தனூர் கிராமங்களில் அமைந்துள்ள அருணா பயர்க்ளே சுரங்கம் விஸ்தீரணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், மீனாட்சி ராமசாமி கல்வியல் கல்லூரியில் இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுசசூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

மேலும், இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசன், கோட்டாட்சியர் அமர்நாத், மற்றும் ஆலைத்தலைவர், பணியாளர்கள், அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News