அரியலூர்: ரூ.26 லட்சம் மதிப்பில் குளம் சீரமைக்கும் பணி - எம்எல்ஏ துவக்கி வைப்பு
உடையார்பாளையத்தில்,ரூ.26லட்சம் மதிப்பீட்டில் பெரியசாமி குளம் சீரமைக்கும் பணியினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவங்கி வைத்தார்.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேருராட்சிக்குட்பட்ட பெரியசாமி குளத்தினை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பெரியசாமி குளத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ.26லட்சத்தை ஒதிக்கீடு செய்துள்ளது.
இக்குளம் சீரமைக்கும் பணியினை இன்று ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் இன்று துவக்கி வைத்தார். மழைகாலத்திற்கு முன்னர் பணிகளை விரைவாக செய்துமுடித்து மழைநீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உடையார்பாளையம் கிராம முக்கியஸ்தர்கள் ப.கோபாலகிருஷ்ணன், தங்கராசு, இராயர், கலந்து கொண்டனர்.