அரியலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் : உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க்கும் பணி தொடங்கியது.;
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி துவங்கியது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல்துறையினர் சார்பில் கொரோனா ஊரடங்கு 144 தடை உத்தரவின் போது முக கவசம் அணியாமல் தமிழக அரசின் உத்தரவை மீறி நோய் தொற்றை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரிந்த வாகனங்களை தா.பழூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனர்.
தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி பிடித்து வெகு நாட்களாக உள்ள வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக தா.பழூர் காவல்துறையினர் வாகன உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாகனத்தின் ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை சரி பார்த்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
வாகனங்கள் ஒப்படைக்கப்படுவதால் அதிகப்படியானவர்கள் காவல் நிலையம் வருகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் அழைப்பு வந்த பிறகு வரும்படியும், மேலும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி வரவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர்.