ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 103 பேக்கு கொரோனா

ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2021-06-01 15:58 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 12 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 23 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 35 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 33 பேரும் சேர்த்து 103 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 890 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 2013 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1202 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 1024 நபர்களும் சேர்த்து 5129 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News