ஜெயங்கொண்டம் தொகுதியில் 112 பேருக்கு கொரோனா
ஜெயங்கொண்டம் தொகுதியில் 112 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டது.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 8 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 47 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 37 பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 20 பேரும் சேர்த்து 112 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 840 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1829 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 1056 நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 907 நபர்களும் சேர்த்து 4632 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.