தா.பழூரில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய எம்எல்ஏ
தா.பழூரில் பொதுமக்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கபசுர குடிநீர் வழங்கினார்.;
தா.பழூர் கடைவீதியில், பொது மக்களுக்கு கபசுர குடிநீர்,முன்கள பணியாளர்களுக்கும்,பொதுமக்களுக்கும்,ஊராட்சி மன்ற தலைவர் வி.கதிர்வேல் அவர்கள் ஏற்பாட்டில், தா.பழூர் காவல் ஆய்வாளர் ஜெகதீஸன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனவேல், ஊராட்சி மன்ற செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் கபசுர குடிநீரை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
மேலும் தா.பழூர் தோப்பு தெருவில் வசிக்கும் விசிறி மட்டை விற்கும் குஞ்சிதபாதம்-வசந்தா தம்பதியரின் வருமை நிலையை அறிந்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை,ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எஸ்.சூசைராஜ், எஸ்.ஆர்.தமிழ்செல்வன், த.நாகராஜன், அ.எழிலரசி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ந.கார்த்திகைகுமரன், தா.பழூர் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.