ஜெயங்கொண்டம் தொகுதியில் 143 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 143 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2021-05-22 16:30 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் ஜெயங்கொண்டம் நகரில் 20 பேரும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் 48 பேரும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 52பேரும், தா.பளூர் ஒன்றியத்தில் 23பேரும் சேர்த்து 150 நபர்கள் இன்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 768 நபர்களும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புறங்களில் 1497 நபர்களும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 845நபர்களும், தா.பளூர் ஒன்றியத்தில் 801 நபர்களும் சேர்த்து 3911 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News