அரியலூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு கொரோனா, 3 பேர் உயிரிழப்பு
.அரியலூர் மாவட்டத்தில் இன்று 83 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 3 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.;
அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 83பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர்உயிரிழந்துள்ளார். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 55 பேர். மருத்துமனைகளில் 588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 14,292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 13,515 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 189 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 913 பேர். இதுவரை 2,19,097 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 14,292 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,04,805 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9609, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,78,148 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 28,718 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,484 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 27,115 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 119 பேர்.
கொரோனா இன்று முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2849 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 2718 பேர்போட்டுக்கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 131 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.
நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 26 இடங்களும், நகரப்பகுதியில் 2 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 29 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.