ஆண்டிமடத்தில் அமைச்சர் சிவசங்கரிடம் கொரோனா நிதி வழங்கிய ஆசிரியர்கள்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அமைச்சர் சிவசங்கரிடம் ஆசிரியர்கள் நிதி வழங்கினர்.

Update: 2021-06-03 14:05 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் அமைச்சர் சிவசங்கரிடம் ஆசிரியர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கினர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை அமைச்சரும் ஆகிய எஸ். எஸ். சிவசங்கர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் 98 காவலர்களுக்கு அரிசி, காய்கறி, போன்ற மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கினார். அதேநேரம் முதலமைச்சரின் கொரோனா பொது நிதிக்காக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் அய்யூர் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் லூர்துசாமி அவர்கள் ஒரு மாத சம்பளம் ரூபாய் ஒரு லட்சத்தி 3438, 



ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராஜேந்திரன் 34 ஆயிரத்து 148 ரூபாய், ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னசாமி 25,000 ரூபாய், அரியலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக கருணாகரன் 25,000 ரூபாய், ஆசிரியர் கருணாகரன் 5000 ரூபாய், ஆண்டிமடம்-விளந்தை தொழிலதிபர் ஏ.வி.எம் சாமிநாதன் அவர்கள் 10,000 ஆகியோர் காசோலையாக வழஙகினர்.

ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திஜில் கீர்த்தனா என்ற மாணவன்  சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் 3,730 ரூபாய் அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News