ஆண்டிமடம் : டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை

ஆண்டிமடம் அருகே கோவில் வாழ்க்கை கிராமத்தில் டிராக்டர் ஓட்டி பால் சொசைட்டியில் மோதிய இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-16 10:33 GMT

தற்கொலை செய்து கொண்ட புவியரசு.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கோயில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் புவியரசு (வயது 19).இவர் கூவத்தூர் ஐ.டி.ஐ. யில் ஐ.டி.ஐ. படிப்பு படித்து வந்தார். நேற்று பொங்கலை முன்னிட்டு மாடு மற்றும் டிராக்டர்களை அலங்காரம் செய்து சாமி கும்பிட்டுவிட்டு ஊர்வலம் செல்வதற்காக புவியரசு ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பால் பூத் ஒன்றில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியது. இதில் அங்கிருந்தவர்களுக்கு 2 பேருக்கு காயமும் ஓவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் புவியரசை தேடி காவல்துறையினர் வந்துள்ளனர். புவியரசு இல்லாததால் வந்தால் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லு மாறு கூறிவிட்டு காவல்துறையினர் சென்றுவிட்டனர். இந்நிலையில் புவியரசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உறவினர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது வீட்டிற்கு சிறிது தூரம் உள்ள வயல்வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புவியரசு தூக்கிட்டு இறந்துள்ளார். இதுகுறித்து  அறிந்த ஆண்டிமடம் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News