மாளிகைமேட்டில் யானை தந்தத்தாலான மனிதஉருவம் கொண்ட பொம்மை கண்டுபிடிப்பு
தற்பொழுது யானை தந்தத்தாலான மனித உருவம் கொண்ட பொம்மை வடிவில் கீழ் பகுதி பாதி உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜெயங்கொண்டம்-கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் அரண்மனை இருந்ததாக அகழ்வாராட்சி செய்யப்பட்ட மாளிகை மேட்டில் யானை தந்தத்தாலான மனித (பெண்) உருவம் கொண்ட பொம்மை வடிவில் கீழ் பகுதி மட்டும் பாதி உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அடுத்து உட்கோட்டை அருகே உள்ள மாளிகைமேட்டில் 2 ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழை வருவதால் தோண்டப்பட்ட குழிகளில் படுதா போட்டு மூடி வைத்து மழை இல்லாத நேரத்தில் அகழ்வாராய்ச்சி பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சீன நாட்டு மண்பானை ஓடு, செப்பு காசுகள், மணி, இரும்பிலான ஆணி, கூரை ஒடு, வட்ட சில்கள், செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கட்டுமான அமைப்புகள் என இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்து வந்த 2- ஆம் கட்ட அகழ்வராய்ச்சியின்போது உடைந்த செப்பு கலந்த தங்க காப்பு, வளையல்கள் என அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது யானை தந்தத்தாலான மனித உருவம் கொண்ட பொம்மை வடிவில் கீழ் பகுதி மட்டும் பாதி உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது யானை தந்தத்தால் ஆன உருவ பொம்மைதானா ? ராஜேந்திர சோழன். குதிரைப்படை, யானைப்படை உள்ளிட்டவைகள் வைத்திருந்ததால் யானை தந்ததால் பொம்மை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தோண்ட, தோண்ட அரிய வகை பொருட்கள் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.