அம்மன் கோவில் உண்டியல் உடைத்து சுமார் 90 ஆயிரம் பணம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
இறவாங்குடி கிராமத்தில் உள்ள திரொளபதி அம்மன் கோவில் உண்டியல் உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் பணததை திருடிச் சென்றனர்.
ஜெயங்கொண்டம் வட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது திரொளபதி அம்மன் கோவில்.
நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலின் முன்கதவு பூட்டை உடைத்து, அடுத்து உள்ள மூலஸ்தான கதவில் இருந்த பூட்டை உடைக்க முடியாததால் இரும்பு கேட்டின் கம்பியை வளைத்து உள்ளே சென்றனர்.
அங்கு இருந்த உண்டியலை மர்ம நபர்கள் எடுத்துச்சென்று கோவிலின் அருகில் வைத்து உடைத்தனர். அதில் இருந்த சுமார் 90 ஆயிரம் மதிப்புள்ள உண்டியல் காணிக்கை பணங்களை திருடி சென்றனர்.
பெரிய உண்டியலில் இருந்த சுமார் 85 ஆயிரம், சிறிய உண்டியலில் சுமார் 5000 இருந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவ அப்பகுதியில் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.