அம்மா உணவகத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ திடீர் ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அம்மா உணவகங்களை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.உணவை சாப்பிட்டு பரிசோதனை செய்தார்.

Update: 2021-05-16 05:21 GMT

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், உணவை ருசித்து பார்த்து பரிசோதித்தார்.

ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் உணவு தயாரிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வுணவகத்தில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ  கண்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டு பரிசோதித்தார். பின்னர் அம்மா உணவகத்தில் உணவு தயார் செய்யும் ஊழியர்களிடம் தரமான முறையில் உணவு தயாரித்து வழங்கவும், சுகாதாரமான முறையில் உணவகத்தை பராமரிக்கவும், ஆலோசனைகள் கூறினார்.

உடன் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வ.சுபாஷினி, பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சிவராமன், நகராட்சி மற்றும் அம்மா உணவக ஊழியர்கள் இருந்தனர்.

Tags:    

Similar News