ஜெயங்கொண்டம்: வேளாண் சந்தை,வணிகம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

ஜெயங்கொண்டத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை உள்ளிட்ட வேளாண் வணிகம் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2022-01-06 10:03 GMT
ஜெயங்கொண்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் செயல்பாடுகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண்மை துணை இயக்குநர் ச.சிங்காரம் தலைமை தhங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சியில் வேளாண்மை உணவு பதப்படுத்தும் தொழில், மின்னணு தேசிய வேளாண் சந்தை, சேமிப்புக் கிடங்குகள், பயறு வகைகள் மற்றும் கொப்பரைக்கான விலை ஆதரவு திட்டம், பொருளீட்டுக் கடன், உழவர் நலதிட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.

உழவர் சந்தை, குளிர்பதனக்கிடங்கு, தமிழ்நாடு சிறுவியாபாரிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான மத்திய மாநில அரசின் ஆதரவு திட்டங்கள், உணவுப் பூங்கா, தமிழ்நாடு உணவுப் பதப்படுத்தும் கொள்கை. விநியோக தொடர் மேலாண்மை, வேளாண் ஏற்றுமதி, அக்மார்க் ஆகியவை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளை பொருள், பாரத பிரதமர் உணவுப் பதப்படுத்தும்

சிறு குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான திட்டங்களை பற்றியும் பயிற்சி வழங்கினர். இவ்வகையான விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியாக குழு விவாதமும், விவசாயிகளின் கேள்விகளுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News