விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்
வேளாண்மை துறையின் சார்பில் ரூ. 1 கோடியே 35லட்சம் மதிப்புள்ள வேளாண்மை இயந்திரங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.;
அரியலூர் மாவட்டத்தில், விவசாய பயனாளிகளுக்கு தமிழக அரசின் வேளாண்மை துறையின் சார்பில், ரூபாய் 51,57,299 மதிப்பீட்டில் அரசு மானியத்தில், ரூபாய் 1,35,55,299 மதிப்புள்ள வேளாண்மை இயந்திரங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர்கள் நெடுமாறன்,இளவரசன், உதவிப் பொறியாளர்கள் சிலம்பரசன்,ஜெயச்சந்திரன்,மகாநதி,ஷீலாராணி. உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.