உடையார் பாளையத்தில் ரூ.1கோடியில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம்

உடையார் பாளையத்தில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

Update: 2021-10-01 07:32 GMT

உடையார்பாளையத்தில் 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தில் நபார்டு நிதியின் மூலமாக 1கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை துறையில், புலம் கண்காணிப்பு மற்றும் விவசாய தகவல் தொழில்நுட்ப மைய கட்டிடம் கட்டும் பணியின் பூமி பூஜையை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார் .

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை(கட்டிடம்) செயற்பொறியாளர் ஆர்.இரவிச்சந்திரன், கால்நடைத் துறை இணை இயக்குனர் ஹமீதுஅலி, கால்நடை நோய் புலனாய்வுபிரிவு துணைஇயக்குநர் சொக்கலிங்கம், உடையார்பாளயம் துணை இயக்குனர் ரமேஷ், பொ.ப.து உதவி பொறியாளர் ஜெயந்தி, பேரூர் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News