ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 7-ம்தேதி பருத்தி ஏலம்
ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வருகிற 7-ம்தேதி பருத்தி மறைமுக ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அடுத்த பருத்திக்கான மறைமுக ஏலம்(07.07.2022) வியாழன் கிழமை நடைபெறும். விவசாயிகள் விளைவித்து அறுவடை செய்த பருத்தியை புதன் கிழமைக்குள் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்க்கு கொண்டு வந்து வைக்க வேண்டும். பருத்தியை ஈரப்பதமின்றி நன்கு உலர வைத்து ,தூசுகள் மற்றும் அயல் பொருட்கள் கலப்பின்றி சுத்தமாக சணல் சாக்கில் கொண்டு வரவும்.
வெளி மற்றும் உள் மாவட்ட வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு தரத்திற்கு ஏற்ப நல்ல விலை பெறுவதோடு சரியான எடை ,தரகு மற்றும் கமிஷன் இன்றி விற்பனை செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தங்களின் விளைபொருளுக்கு உரிய தொகையை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏதுவாக வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு ஒத்துழைப்பு நல்கி தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து பயனடைய அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்கு விற்பனைக்கூட அலுவலர்களை 9655180343,8760828467மற்றும் 9842852150 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.