அரியலூர் அருகே குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேர் கைது
Ganja Seized - அரியலூர் அருகே குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
Ganja Seized - அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் கடந்த 23-ந் தேதி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால் பயமடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து அந்த லாரியை போலீசார் சோதனை செய்தபோது துணிக்கழிவு மூட்டைகளுக்கு கீழே வைத்து பதுக்கி கடத்தி வரப்பட்ட 73 மூட்டை குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி லாரியில் காபி கொட்டை தோல் மூட்டைகளுக்கு கீழே பதுக்கி கொண்டு வரப்பட்ட 83 மூட்டை குட்கா பொருட்கள் கும்பகோணம் கொண்டு செல்லப்படும் வழியில் மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் கைப்பற்றப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த லாரியை ஓட்டி வந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிலால் கிராமத்தில் வாகன சோதனையின்போது துணி கழிவு மூட்டைகளுக்கு கீழே பதுக்கி கடத்தி வரப்பட்ட குட்கா முட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன், கும்பகோணம் ராமசாமி தெரு சரவணன் , கும்பகோணம் கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை வஸ்னாராம் , கும்பகோணம் சாக்கோட்டை பகுதியில் மகன் அழகர் ஆகியோரை தா.பழூர் மற்றும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், இரண்டு குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2