அரியலூர், கடலூர் மாவட்டங்களில் கோவில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் கோவில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை ஆண்டிமடம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-21 06:26 GMT

அரியலூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் கோவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை ஆண்டிமடம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


அரியலூர், கடலூர் மாவட்டங்களில் தொடர் கோவில் உண்டியல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பலே திருடர்களை ஆண்டிமடம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அரியலூர் மாவட்டத்தில் 10 கோவில்களில் திருட்டு சம்பவங்களிலும், மூன்று இருசக்கர வாகன திருட்டுகளிலும், கடலூர் மாவட்டத்தில் 2 கோவில் திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள். ஆண்டிமடம் போலீசாருடன் தனிப்படை போலீசார் இணைந்து திருடர்களை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமான கிராம கோவில்களில் பல்வேறு இடங்களில் தொடர் உண்டியல் திருட்டு, சுவாமி நகை திருட்டு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான்அப்துல்லா மேற்பார்வையில், ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையில், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு போலீஸ் படையும், குற்ற புலனாய்வு துறை போலீசார் ஒரு படையாகவும் 2 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று குற்றவாளிகள் தொடர்பான ரகசிய தகவல் அடிப்படையில் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் ரோட்டில் ராங்கியம் பெட்ரோல் பங்க் அருகில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி தமிழ் பாரதி, விஜய் (என்கிற) விஜயகுமார், சிறுகளத்தூர் அன்புமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது ஆண்டிமடம் போலீஸ் சரகத்தில் 4 கோவில்களிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்தில் 3 கோவில்களிலும், மீன்சுருட்டி போலீஸ் சரகத்தில் 1 கோவிலிலும், தளவாய் போலீஸ் சரகத்தில் 2 கோவில்களிலும் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கோவில் சாமி சிலைகளில் இருந்த நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.

மேலும் குவாகம் போலீஸ் சரகத்தில் 2 இருசக்கர வாகனங்களையும், உடையார்பாளையம் போலீஸ் சரகத்தில் ஒரு இருசக்கர வாகனத்தையும் அவர்கள் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகத்தில் இரண்டு கோவில்களில் உண்டியல் மற்றும் நகைகளை திருடியதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 13 திருட்டு சம்பவங்களிலும் கடலூர் மாவட்டத்தில் இரண்டு திருட்டு சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து ரூபாய் 25 ஆயிரம் ரொக்க பணத்தையும், சாமி சிலைகளில் இருந்த தங்க தாலிகள் 52 கிராம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. தொடர் திருட்டு சம்பவங்களை ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளையும் ஆண்டிமடம் போலீசார் அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தனி படை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

Tags:    

Similar News