ஜெயங்கொண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை

ஜெயங்கொண்டம் அருகே 11 -ம் வகுப்பு பள்ளி மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டான்.;

Update: 2022-05-23 14:10 GMT
ஜெயங்கொண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் தலையில் கல்லை போட்டு கொலை

கொலை செய்யப்பட்ட மாணவன்.

  • whatsapp icon

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தாய் இறந்த நிலையில் தந்தை வேறு திருமணம் செய்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவர் அரியலூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில்‌ வெள்ளிக்கிழமை மாலை சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பொற்பதிந்த நல்லூர் கிராமத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் இரவு வீட்டில் தனியாக தூங்கிய போது மாணவன் தலையில் யாரோ மர்ம நபர்கள் பாறாங்கலை போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News