பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2021-07-12 10:49 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் முக்கிய வீதிகள் வழியாக சைக்கிளை தள்ளிக்கொண்டு பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்தனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு வந்து காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வட்டார காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News