சம்பளம் வழங்க வலியுறுத்தி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்.

ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-03-21 07:12 GMT

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள் என 180 பேர் தூய்மைபணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாத சம்பளம் இதுவரைவழங்கப்படவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்மன்ற தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு அதற்கான ஊதியமோ அல்லது சம்பளமோ இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாதத்தில் முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷிணி தூய்மைபணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

Similar News