பாமக தேர்தல் அலுவலக திறப்பு விழா
பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு தேர்தல் பரப்புரைக்காக ஜெயங்கொண்டம் நகரில் தேர்தல் பணிமனை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பாலு தேர்தல் பரப்புரைக்காக ஜெயங்கொண்டம் நகரில் தேர்தல் பணிமனை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் பாலு நிறுத்தப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயங்கொண்டம் நகரின் பிரதான வீதியில் பாமக தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.இராமஜெயலிங்கம், பாஜக மாவட்ட தலைவர் T.K.அய்யப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, பாமக மூத்த முன்னோடி பாஜக ராஜா முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கை ஏற்றி தேர்தல் பணியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் பாமக மூத்த முன்னோடி ஜெயராமன், எம்.கே.இராஜேந்திரன், மாநில துணைப் பொதுச் செயலாளர் டிஎம்டி. திருமாவளவன், மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி, பாமக மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி மற்றும் பாட்டாளி சொந்தங்கள், அனைத்து கட்சி செயல்வீரர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இன்று மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.