குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு பணி: விவரங்களை வழங்கிட கலெக்டர் அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமப்பகுதியில் குடிசைவீடுகளின் கணக்கெடுப்புபணி விவரங்களை வழங்க வேண்டுமென கலெக்டர் அறிவிப்பு;
பைல்
குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு பணிக்கு போதிய விவரங்கலை பயனாளிகள் அளிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்: அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் அமைந்துள்ள 201 கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள புதிய குடிசை வீடுகளை (2010-ம் ஆண்டிற்கு பிறகு அமைக்கப்பட்டவை) கணக்கெடுக்கும் பணி தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி 04.04.2022 முதல் துவங்கி 25.04.2022-க்குள் முடிக்கப்படவுள்ளது. 2010-ம் ஆண்டிற்கு பிறகு கட்டப்பட்டு வேறு எந்த அரசு திட்டத்திலும் பயன் பெறாத குடிசை வீடுகளின் விவரங்கள் ஊராட்சி தோறும் இதற்கென நியமிக்கப்பட்ட மூன்று நபர் குழுவால் கணக்கீடு செய்யப்பட உள்ளன.
நடப்பு 2022-ம் ஆண்டு புதிய குடிசை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் குழுவினர் கிராமப்பகுதிகளுக்கு கணக்கெடுப்பு பணிக்காக வருகை தரும்போது கூரை வேயப்பட்ட குடிசை வீட்டில் வசிப்பவர்கள் தங்களது ஆதார் எண், குடியிருப்பு மனை தொடர்பான பட்டா அல்லது விற்பனை ஒப்பந்த பதிவு ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கவும், அவர்கள் கேட்கும் குடும்ப அட்டை எண், மின் இணைப்பு எண் போன்ற இதர விவரங்களை வழங்கிடவேண்டும். அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமப்பகுதியில் கூரை வேயப்பட்ட குடிசை வீட்டில் வசிக்கும் மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.