அரியலூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் 'போக்சோ'வில் கைது
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
அரியலூர் மாவட்டம் மறவனூர் கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி அடிக்கடி பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஹரிஸ் என்பவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கடந்த மாதம் 13 ஆம் தேதி வீட்டில் இருந்த போது மாணவியின் தந்தை பார்த்த நிலையில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஹரிஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடதக்கது.