6 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தது

புனேவில் இருந்து 6லட்சம் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தது.

Update: 2021-05-15 08:41 GMT

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சா் மு.க ஸ்டாலின் பிரதமா் மோடிக்கு அவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று மத்திய அரசுக்கு கூடுதலாக தடுப்பூசி மருந்துகளை புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் விமானங்களில் சென்னைக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.

அதன்படி புனேவில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 6 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி மருந்துகள் 50 பார்சல்களில் வந்தது.

தமிழக சுகாதாரத்துறையினா் சென்னை விமானநிலையத்தில் இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு வாகனங்கள் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு 30 பாக்ஸ் மற்றும் பெரியமேட்டில் உள்ள மருத்துவ கிழங்கிற்கு 20 பாக்ஸை எடுத்து சென்றனா்.

Tags:    

Similar News