திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-வரை நீடிக்கும். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார்.