உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து செழிக்க வேண்டுமா? அப்ப படிங்க
வீடுகளில் செல்வம் சேர்ந்து செழிப்புடன் திகழ இந்து தர்மத்தில் (சனாதன தர்மத்தில்) எளிமையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.;
பச்சைக் கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.
வீட்டின் பூஜை அறையில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது. அல்லது வீட்டின் பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றும் பொழுது இரு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்வது செல்வத்தை உங்களிடம் ஈர்த்துக் கொடுக்கும்.
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்கவே கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம் துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
மகாலட்சுமியின் வாசம் நிறைந்திருக்கும் லவங்கப்பட்டையின் குச்சியில் பத்து ரூபாய் தாளை சொருகி வைத்து, அதனை உங்கள் பணப் பெட்டியில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் பணத்தை உங்களிடம் ஈர்க்க முடியும்.
நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் இரண்டு புதினா இலைகளை எப்பொழுதும் வைத்திருக்க, உங்கள் பர்ஸில் இருக்கும் பணம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.
வீட்டில் செய்யக்கூடாத செயல்கள் : அன்னம், உப்பு, நெய் இவைகளை எப்போதும் நம் வெறும் கையினால் பரிமாறக் கூடாது. அவ்வாறு செய்வது மாமிசத்தை பரிமாறுவதற்கு சமமாகும். இதனால் வீட்டில் தரித்திர நிலை உண்டாகும்.
இரவு நேரங்களிலும், வீட்டில் பூஜை செய்து முடித்த உடனேவும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் லட்சுமி வெளியே சென்று தரித்திர நிலை மட்டுமே நிலைத்திருக்கும்.
அதேபோல் வீட்டை பெருக்கி குப்பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் சேர்த்து வைக்கக் கூடாது. இதுவும் ஒரு வகையான தரித்திர நிலையாகும்.
எவருக்கேனும் பணம் கொடுக்கும் பொழுது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் உங்களின் அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு சென்று விடும்.
வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு, பால் போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவற்றை குறைய விட்டாலும் தரித்திரம் உண்டாகும்.
இவ்வாறான உங்களின் அன்றாட செயல்களை சரிவர மாற்றிக்கொண்டால் உங்கள் வீட்டில் உள்ள தரித்திர நிலை நீங்கி பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.
வெள்ளி கிழமைகளில் இந்த மஹாலகக்ஷ்மி மந்திரத்தை மனதார 11 முறை உச்சரியங்கள் :
ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே
ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ!