வேண்டும் மோடி, மீண்டும் மோடி..! ஏன்? எதற்காக...?

மீண்டும் மோடி... வேண்டும் மோடி என சொல்வதற்கான சில காரணங்களை பா.ஜ.க.,வினர் அடுக்கி வருகின்றனர்.

Update: 2024-04-15 06:07 GMT

தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலையுடன் டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்.,

பா.ஜ.க., மருத்துவப்பிரிவு நிர்வாகி டாக்டர் பாஸ்கரன் எம்.டி.எஸ்., கூறியதாவது:

மோடி என்பவர் ஒரு வரலாற்று நிகழ்வு. அவர் ஒரு சாம்ராஜ்யம். உலகின் அழிக்க முடியாத பல வரலாற்று பதிவுகளை அவர் பதிவிட்டுள்ளார். அவரது உழைப்பும், நாட்டின் மீது வைத்துள்ள பக்தியும் அளவற்றது. அவர் செய்த சில சாதனைகளைச்  சொல்கிறேன். அத்தனையும் சொல்லி முடிக்கும் முன் தேர்தல் முடிந்து விடும். அதனால் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

ஒரே நாளில் 500,1000 ரூபாய் நோட்டை ஒழித்தார். இதன் மூலம் இந்தியா தப்பியது. பல நாட்டு பொருளாதாரம் அழிந்தது.

ஒரே நாளில் ஒரே வரியை அறிமுகப்படுத்தினார். இதனால் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசாக மாறி வருகிறது.

ஒரே இரவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரத்தை ஒழித்தார். இதனால் இந்தியா தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக உள்ளது.

ஒரே நாளில் வங்காளத்தின் எல்லை பிரித்து அமைதி ஏற்படுத்தினார். வங்காளம் இன்று நமக்கு நட்பு நடாக மாறி விட்டது. ஒரு நாளில் கூட சீனாவின் மிரட்டலுக்கு பின்வாங்கவில்லை. இரண்டு முறை எல்லையில் நடந்த மோதல்களில் இந்தியாவே வென்றது. மூன்றாவது முறை போர் கவுண்டன் தொடங்கிய நிலையில் சீனா தான் வெள்ளைக்கொடி துாக்கி சமரசத்திற்கு வந்தது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய அத்தனை பேருக்கும் வங்கிக் கணக்குத்  தொடங்கி, அவர்களை வங்கி வரவு செலவுகள் செய்ய நடவடிக்கை எடுத்தார்.

ஒரே நாளில் இஸ்லாமிய பெண்களுக்கு வாழ்வியல் பாதுகாப்பளித்த புனித சம்பவம், இந்த சாதனைக்காக இன்னும் பல லட்சம் முஸ்லீம் குடும்பங்கள் மோடியை வாழ்த்துகின்றன.

ஒரே நாளில் இந்து கலாசாரத்தை மீட்டு ஜல்லிகட்டு தடையை நீக்கினார். 3மணி நேரத்தில், 5மத்திய அமைச்சர்கள் கையெழுத்து போட்டு, பீட்டாவை நாட்டை விட்டு துரத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழ் கலாசாரத்தை பாதுகாத்தார்.

ஒரு நாள் கூட கண்ணாடி கூண்டில் நின்று தேசிய கொடியேற்றாத மாவீரன். இது இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை. தமிகத்திற்குள் வரமுடியாது என்று கொக்கரித்த போது, கோபாலபுரத்திற்குள் நுழைந்து "என்னோடு வாருங்கள் அங்கே மகன்கள் சண்டையில்லை-ஓய்வெடுக்கலாம்" என்ற அன்பொழுக பேசிய மாவீரன் பிரதமர் மோடி.

அந்த மாவீரனிடம்.. அமெரிக்கா எங்கள் நாட்டில் நுழைய முடியாது என்றது. இப்போது அமெரிக்கா அடிபணிந்து நிற்கிறது. சீனாவின் சீற்றம் சிதறடிக்கும் என்றார்கள். சீனாவே நீங்கள் தான் எங்கள் நைனா என்று பதறுகிறது. ரஷ்யா ராட்சசன் என்றார்கள். இன்று ரஷ்யாவே எங்களின் ரட்சகர் மோடி தான் என்கிறது.

அந்த மாவீரனிடம்...யானைகளே அலறுகின்றன...சிறுநரிகளோ சந்துக்குள் நின்று சிந்து பாடுகின்றன...நிச்சயமாக ஒருநாள் "காவேரி மேலாண்மை வாரியம்" அமைப்பார், "கோதாவரி-காவேரி இணைப்பார்"

மெஷினரி வியாதிகளும் அரபு ஜிகாதிகளும் இந்து கடவுள் மறுப்பாளர்களும் பெரியார் மூளையில் சிந்திப்பவர்களும் சூட்கேஸ் போராளிகளும் குவாட்டர் புரட்சியாளர்களும், வரி கட்டாமல் காசு சேர்த்தவரும் , கருப்பு பணத்தை இழந்தவரும், நிலத்தை அபகரித்தவரும், பினாமிகளை வைத்திருப்பவரும்  கறைபடிந்த ஊடகங்களை இயக்குபவரும், நேர்மையற்றவரும், ஒழுக்கம் இல்லாதவரும்  அடுத்தவர் அறிவில் சிந்திப்பவரும் கதறுகின்றனர்.

தமிழ்நாட்டை நோக்கி மோடி சுனாமி வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு வேண்டும் மோடி... மீண்டும் மோடி என்கிறோம். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News