சரத்குமார் பா.ஜ.க.,வில் சேர்ந்தது ஏன்? கனிமொழியை எதிர்த்து களம் காண்கிறாரா?

பா.ஜ.க.,வில் சேர்ந்துள்ள சரத்குமார் துாத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் காண்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-03-13 04:32 GMT

பாரதீய ஜனதா கட்சியில் சரத்குமார் தனது கட்சியை இணைத்துக் கொண்டார். தானும் முழு நேர பா.ஜ.க., உறுப்பினராகி விட்டார். இதன் பின்னணி காரணம் குறித்து பல ருசிகர தகவல்கள் உலா வருகின்றன.

கனிமொழிக்கு எதிராக வலுவான வேட்பாளர் தேவை என பா.ஜ.க., திட்டமிட்டு தேடி வந்த நிலையில் சரத்குமார் அந்த இடத்திற்கு பொருத்தமானவராக இருந்திருக்கிறார். அவரிடம் பேசிய பா.ஜ.க., தலைமை, துாத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து களம் காணுங்கள். பா.ஜ.க.,வில் இணைந்து விட்டதால், நீங்கள் பா.ஜ.க., வேட்பாளர் தான். எனவே தேர்தல் செலவை பா.ஜ.க., மேலிடம் பார்த்துக் கொள்ளும்.

வெற்றி பெற்றால் லோக்சபா உறுப்பினராகி மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம். ஒரு வேளை தோற்று விட்டால் கவலைப்பட வேண்டாம். ராஜ்யசபை உறுப்பினராகி, மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறி உள்ளனர். தேர்தல் செலவு, மத்திய அமைச்சர் என பெரிய வாய்ப்புகள் தேடி வரும் போது பயன்படுத்திக் கொள்வது தானே புத்திசாலித்தனம். எனவே சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.க.,வில் இணைத்து, அக்கட்சியில் ஐக்கியமாகி விட்டார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

Tags:    

Similar News